இன்றைய தலைப்பு செய்திகள் | Today Headlines | 11.07.18 | Sathiyamnews

2018-07-17 2

அணைகளில் மழைநீரை தேக்கி வைக்க முடியாமல் வெளியேற்றும் கர்நாடகா.... கபினியில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்பட்டும் நீரின் அளவு 45 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு......

தாய்லாந்து குகைக்குள் சிக்கி தவித்த 13 பேர் பத்திரமாக மீட்பு... உயிரை பணயம் வைத்து மீட்ட கடற்படை ஜாம்பாவான்களுக்கு குவியும் பாராட்டு....

டாஸ்மாக் கடைகளை பிற்பகல் 2 மணிக்கு திறந்தால் என்ன....? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி.....

நீட் தேர்வெழுதிய தமிழக மாணவர்களுக்கு196 கருணை மதிப்பெண்கள் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு.... புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிட வேண்டும் என்ற உத்தரவால் மாணவர் சேர்க்கையில் புதிய சிக்கல்.....

ரசாயனம் கலந்த மீன்கள் விற்கப்படுவதாக எழுந்த சர்ச்சையால் தமிழகம் முழுவதும் சோதனை.... பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி......

8 வழி பசுமைச்சாலை குறித்து கருத்து கேட்பு கூட்டத்தில் கைதிகள் போல் நடத்துவதா.......? கூட்டத்தை புறக்கணித்து பசுமை வழிச்சாலைக்கு எதிராக முழக்கம்.....

அடுத்த வாரம் தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்..... அவை சுமுகமாக நடைபெற ஒத்துழைக்க வேண்டும்..... எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கடிதம்......

மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் மும்பை மாநகரம்... அனைத்து வகை போக்குவரத்தும் ஸ்தம்பித்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு....

தெலுங்கானாவில் குடிபோதையில் கொடூரனாக மாறிய தந்தை...... 2 வயது குழந்தையை தூக்கி போட்டு பந்தாடிய தந்தையின் அட்டகாசம்.......

உலக மக்கள் தொகை தினம் இன்று.... இன்னும் சில ஆண்டுகள் இந்தியாவின் மக்கள் தொகை எப்படி இருக்கும்..... சத்தியம் தொலைக்காட்சியின் சிறப்பு செய்தி தொகுப்பு......

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு பிரான்ஸ் அணி தகுதி.... முதல் அரையிறுதி ஆட்டத்தில் பெல்ஜியம் அணியை வீழ்த்தி முன்னேற்றம்.......

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV